திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்

ஸ்டிரைக் முடிந்ததும் முதலில் தணிக்கையான படங்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் 50 படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டு உள்ளது.
திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்
Published on

திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. சில தியேட்டர்களில் 10 பேர், 5 பேர் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு டிக்கெட் தொகையை திருப்பி கொடுத்து காட்சிகளை ரத்து செய்கின்றனர்.

அநேக தியேட்டர்களில் இரவு காட்சிகளும் காலை காட்சிகளும் நடக்கவில்லை. தியேட்டர்களில் உள்ள கேன்டீன் உணவு பண்டங்கள் விற்பனை ஆகவில்லை. பார்க்கிங் பகுதியும் வெறிச்சோடி கிடக்கிறது. திரையுலகுக்கு ரூ.750 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். 30 படங்கள் தணிக்கை முடிந்து திரைக்கு வர காத்திருக்கின்றன.

கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படமும் தணிக்கை முடிந்து யுஏ சான்றிதழ் பெற்று இருக்கிறது. 20 படங்களை இந்த மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.  அடுத்த மாதம் (ஏப்ரல்) வெளியிடுவதற்காக மேலும் 20 படங்கள் பட வேலைகளை முடித்து தணிக்கைக்காக காத்திருக்கின்றன.

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படமும் இதில் அடக்கம். இந்த படம் ஏப்ரல் 27-ந் தேதி வெளிவரும் என்று அறிவித்து இருந்தனர். இந்த படத்துக்கு தடையில்லா சான்று பெற்று தணிக்கையை முடித்து திட்டமிட்டபடி வெளியிட முயற்சி நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com