அதர்வாவுக்கு 5 ஹீரோயின்கள்: உண்மையை போட்டுடைத்த இயக்குநர்

அதர்வாவை 5 ஹீரோயின்கள் காதலிப்பதாக அதர்வாவை வைத்து படத்தை இயக்கியிருக்கும் ஓடம் இளவரசு தெரிவித்துள்ளார்.
அதர்வாவுக்கு 5 ஹீரோயின்கள்: உண்மையை போட்டுடைத்த இயக்குநர்
Published on

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு மதுரையில் நடத்தப்பட்டது. அதில் அதர்வா, ரெஜினா, அதீதி உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் ரெஜினாவும், அதீதியும் நல்ல தோழிகளாகிவிட்டனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. அதில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள். படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் புதுமையாக இருக்கும்.

ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் எல்லோருடைய கதாபாத்திரத்திலும் இருந்து வேறுபட்டு இருக்கும். ரெஜினாவின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும். இப்படத்தில் அவர் மதுரை பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா, ஐஸ்வர்யா, ப்ரணிதா மூவரும் ஊட்டியில் படிக்கும் கல்லூரி நண்பர்கள். ரெஜினா மற்றும் அதீதி ஆகியோர் அதர்வாவின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்களாக வருகிறார்கள்.

படத்தில் நேஹா மாலிக் என்ற மற்றொரு நாயகியும் இருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் மூலம் படத்தின் அடுத்த பாகத்திற்கு  லீட் வைத்துள்ளோம். `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' திரைப்படமும் பெண்களின் முதல் காதல் பற்றி அழுத்தமான ஒரு உணர்வை தரும். முதல்காதல் தான் சிறந்த காதல் என்பதை திரைக்கதையின் மூலம் அழுத்தமாக கூறியுள்ளோம்.

படத்தில் அதர்வாவின் தந்தை, தீவிர ஜெமினி கணேசன் ரசிகர் என்பதால் அவருக்கு ஜெமினி கணேசன் என்று பெயர் வைத்திருப்பார். சூரி, சுருளி ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சுருளி ராஜன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படத்தின் துவக்கம் இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com