ரஜினியின் `2.0' படத்திற்கான அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அகஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடித்துவரும் `2.0' படம் குறித்த பிரம்மாண்ட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினியின் `2.0' படத்திற்கான அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பு
Published on

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ல் ரிலீசாக இருக்கிறது. அதற்கு முன்னதாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `2.0' படத்தின் புரமோஷனில் புதுமையான முயற்சியை படக்குழு மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, படத்தின் புரமோஷனுக்காக ஒரு உலக சுற்றுலாவை தொடங்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சாதாரணமாக ஒரு தமிழ் படத்திற்கு புரமோஷன் செய்தால், படக்குழு ஒரு உள்ளூர் சுற்றுலா அல்லது பக்கத்து மாநிலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும். இந்நிலையில், தமிழ் படம் ஒன்றின் புரமோஷனுக்காக உலக சுற்றுலா நடத்த இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com