இளையராஜா 75 இசை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது - 17 ஆயிரம் ரசிகர்கள் வருகை

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்கின்றனர். #Ilayaraja75 #ProducersCouncil
இளையராஜா 75 இசை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது - 17 ஆயிரம் ரசிகர்கள் வருகை
Published on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகினர் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருந்து சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இன்று மாலை நடிகைகள் பூர்ணா, சுனைனா, நிக்கி கல்ராணி, வேதிகா, சாயிஷா, இனியா, மஞ்சிமா மோகன் ஆகியோர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நடிகர்கள் யோகிபாபு, சதீஷ், ரோபோ சங்கர் கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சிகள், ஆண்ட்ரியா, தமன்னா, ரம்யா நம்பீசன் பங்கேற்கும் பாடல் நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன.

நாளை மாலை இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான மேடை வடிவமைப்பு, திறந்தவெளி அரங்க அமைப்பு பணிகளைப் பார்வையிட்ட பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், “இந்த விழாவில் நாள் ஒன்றுக்கு 17,000 இசை ரசிகர்கள் வருகை தருவார்கள். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா என இந்தியா முழுக்க பலர் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளனர்” என்றார்.

‘இளையராஜா 75’ நிகழ்ச்சியை முன்னிட்டு, நந்தனம் பகுதியில் வாகன நெரிசலை தவிர்ப்பதற்கு போக்குவரத்து போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com