அந்த தகவலை நம்பாதீங்க, நாளைக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாது - சிபிஎஸ்இ விளக்கம்!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் தேர்வு முடிவுக்காக காத்திருப்போர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அந்த தகவலை நம்பாதீங்க, நாளைக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாது - சிபிஎஸ்இ விளக்கம்!
Published on

சிபிஎஸ்இ மாணவர்கலுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நாளை (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியானதை அடுத்து சிபிஎஸ்இ சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறி வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையும் போலியானது என்று தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து வெளியான போலி தகவல் காரணமாக தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com