முன்பதிவில் புது மைல்கல் எட்டிய மஹிந்திரா தார்

இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மஹிந்திரா தார்
மஹிந்திரா தார்
Published on

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் மாடல் முன்பதிவில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை புதிய தார் மாடலை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

அறிமுகமானது முதல் கணிசமான வரவேற்பு பெற்று வருவதை தொடர்ந்து புதிய தார் மாடல் உற்பத்தியை அதிகப்படுத்தும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை தார் மாடல் மஹிந்திராவின் நாசிக் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மஹிந்திரா தார் மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 2020 மஹிந்திரா தார் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 130 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இத்துடன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுகிறது. இது 150 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com