சோதனையில் சிக்கிய ஜீப் காம்பஸ்

ஜீப் காம்பஸ் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.
ஜீப் காம்பஸ்
ஜீப் காம்பஸ்
Published on

ஜீப் நிறுவனம் தனது பிரபல காம்பஸ் எஸ்யுவி மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

புதிய ஜீப் காம்பஸ் மாடல் 2021 வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஜீப் காம்பஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஸ்பை படங்களின் படி புதிய காம்பஸ் மாடல் அதிக மாற்றங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. பின்புறம் புதிய வீல் ஆர்ச்கள், டி பில்லர், பின்புறம் குவாட்டர் கிளாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏழு பேர் இருக்கைக்காக காரின் பின்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

முன்புறம் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய கிரில், பம்ப்பர் மற்றும் பொனெட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த என்ஜின் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸமிஷன் வழங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com