விரைவில் இந்தியா வரும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர்

அடுத்ததாக ஒரு C-பிரிவு SUV மாடல் வெளியாகும்.நிசானின் புதிய C-SUV 2026 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்படும்.
விரைவில் இந்தியா வரும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர்
Published on

நிசான் மோட்டார் கார்ப்பரேசன் ('Nissan Motor Corporation) என்பது ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பொதுவாக நிசான் என்ற பெயரால் அறியப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு கார் உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து, ரெனால்ட்-நிசான் கூட்டணியாக செயல்பட்டது. அதன்பின், சென்னையில் உள்ள ரெனால்ட் நிசான் ஆலையில் இருந்து தனது பங்குகளை விற்ற பிறகும் இந்தியாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அடுத்த ஒரு ஆண்டில் 2 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த நிசான் தயாராகி வருவதாக அதன் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.

முதலாவது மாடல் 7 இருக்கைகள் கொண்ட B-பிரிவு MPV ஆக இருக்கும். இது வெகுஜன மக்கள் பயன்படுத்தும் ரெனால்ட் டிரைபர் மாடலை சார்ந்ததாக இருக்கும். இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாலைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஒரு C-பிரிவு SUV மாடல் வெளியாகும். இது புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டரை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிசானின் புதிய C-SUV 2026 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் அதன் 7 இருக்கைகள் கொண்ட பதிப்பு 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும். C-SUV வரிசையில் முழு எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்யவும் திட்டங்கள் உள்ளன.

அதன் எதிர்கால இந்திய வரிசையில் டீசல் மாடல்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்பதை நிசான் உறுதிப்படுத்தியது. ஏனெனில் B மற்றும் C பிரிவு கார்களில் டீசல் மாடல்களின் விலை வாடிக்கையாளர்கள் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். 2027 நிதியாண்டில் இந்தியாவில் 100,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யவும், இந்தியாவில் இருந்து 100,000 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்யவும் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com