மழைக்கால கார் பயன்பாட்டின் போது அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை

மழைக்கலாங்களில் கார் பயன்படுத்துவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மழைக்காலங்களில் கார் ஓட்டுவதை தவிர்க்கவே பலரும் நினைப்பர். அவ்வாறு குறைந்த அளவு பயன்படுத்தும் போது என்ஜினின் இயக்கமும் குறைவாக இருக்கும். அதனால் பேட்டரியில் தேவையான அளவு மின்சாரம் சேமிக்க முடியாமல் போவதால் சில நேரங்களில் என்ஜினை அணைத்துவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யும்போது, ஸ்டார்ட் ஆகாது. 

எனவே மழை காலங்களில் காரைப் பயன்படுத்தாவிட்டாலும் தினமும் ஸ்டார்ட் செய்து ஒரு 10 நிமிடம் வரை என்ஜினை இயக்க செய்வதால் பேட்டரியில் மின் அளவு குறையாமல் இருக்கும். 

கூலிங் பேன் இயங்காமல் போவதும் உண்டு. தண்ணீர் அதிகம் தேங்கி உள்ள பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டும்போது பம்பர் கிரில் வழியாக தண்ணீர் வேகமாக கூலிங் பேன் உள்ள திசையை நோக்கி வரும், அப்படி வந்த தண்ணீர் கூலிங் பேன் மோட்டார் மீது படும்போது, மோட்டார் ஷார்ட் ஆக வாய்ப்பு அதிகம். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் மெதுவாக வாகனம் ஓட்டுவது நல்லது.

மழைக்காலங்களில் அடிக்கடி டயர் பஞ்சர் ஆகும். இது அதிகம் ஓடாத கார்களில் அதிகமாக நிகழும். ஏனென்றால் டயர் அதிக நேரம் தண்ணீரில் இருப்பது ஒரு காரணம். அது மட்டும் இல்லாமல் ஓடாமல் உள்ள டயரில் கல் மற்றும் கண்ணாடி போன்றவை எளிதில் உள்ளே சென்று டியூப்பை பஞ்சர் செய்து விடும்.

தண்ணீர் மிக அதிகம் தேங்கியுள்ள பகுதியில் (சைலன்ஸர் வரை) வாகனம் செல்லும்போது என்ஜின் ஆப் ஆகி விட்டால் திரும்பவும் ஸ்டார்ட் செய்யக்கூடாது. தண்ணீரில் இருந்து வெளியே நகர்த்தி பின்பு என்ஜினில் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்த்து விட்டு தண்ணீர் புகாமல் இருந்தால் என்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு இயக்கலாம். 

அதேபோல் மழைக்காலங்களில் அடிக்கடி ஏர் பில்டரை பரிசோதிப்பது சிறந்தது. ஏனென்றால் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியில் வாகனம் செல்லும்போது தண்ணீர் புக வாய்ப்பு உள்ளது. இதில் தண்ணீர் போனால் ஏர் பில்டரில் அடைப்பு ஏற்படலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com