Kawasaki Ninja 300 | இந்தியாவில் கவாசகி நிஞ்ஜா பைக் 296 சிசி-யில் அறிமுகம்

பயனர்களுக்கு சிறந்த சாலை உணர்வையும், மேம்பட்ட பாதுகாப்பு வசதியையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kawasaki Ninja
Kawasaki Ninja 300 launched in India with 296cc engine
Published on

கவாசகி நிறுவனம் தனது 2027 நிஞ்ஜா 300 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கவாசகி நிஞ்ஜா 300

இந்த பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரை, 2027 கவாசகி நிஞ்ஜா 300 அதன் முந்தைய மாடலில் இருந்து பெரும்பாலும் மாற்றமின்றி உள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்ட மாடலில், கவசாகி ஒரு பெரிய மிதக்கும் விண்ட்ஷீல்டை பொருத்தியுள்ளது.

இந்த பைக், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ்களுடன், அந்த பிராண்டின் தனித்துவமான லைம் கிரீன் வண்ணத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.

என்ஜின்

இந்த பைக் 296 சிசி, லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் என்ஜின் ஆற்றலுடன் இயங்குகிறது.

இது 11,000 ஆர்.பி.எம்.மில் 39 பிஎஸ் பவரையும், 10,000 ஆர்.பி.எம்.மில் 26.1 என்.எம் உச்சபட்ச டார்க்கையும் உருவாக்குகிறது.

இதன் என்ஜின், ஸ்டாண்டர்டாக அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் அம்சங்களைக் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில், ஸ்டீல்-டியூப் டைமண்ட் ஃபிரேமைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது 37 மிமீ டெலஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகளையும், கவாசகியின் யூனி-ட்ராக் பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷனையும் பயன்படுத்துகிறது.

இது டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்ட 17-இன்ச் அலாய் வீல்களில் இயங்குகிறது. மேலும், கவாசகி ஒரு திருத்தப்பட்ட டிரெட் பேட்டர்னை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது பயனர்களுக்கு சிறந்த சாலை உணர்வையும், மேம்பட்ட பாதுகாப்பு வசதியையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் மூலம் பிரேக்கிங் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

விலை

இந்த பைக்கின் ஆரம்ப நிலை கடந்த ஆண்டு அறிமுகமாக இரட்டை சிலிண்டர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் முந்தைய விலையை விட ரூ. 17,000 அதிகமாகியுள்ளது.

இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 3.34 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com