மிதுனம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை

வேலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உள்ளது.
மிதுனம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை
Published on

மிதுனம்

தொழிலில் மேன்மை உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் 7,10ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். இது நீச்ச பங்க ராஜயோகமாகும். எதிர் நீச்சல் போட்டு உழைத்து ஆதாயத்தை அதிகரிப்பீர்கள். தொழில் வளர்ச்சியால் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். அதிக நேரம் உழைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உள்ளது.

அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். திருமணத் தடை அகலும்.குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவும் அதிகரிக்கும்.13.4.2026 அன்று மாலை 3.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஓரிரு நாள் ஒத்திவைக்கவும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், சம்மந்திகளிடம் நயந்து பேசவும். நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் புதிய தொழில் ஒப்பந்தம், பணப்பரிவர்த்தனை செய்வதை தவிர்க்கவும். தமிழ் புத்தாண்டு அன்று பானகம் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com