Today Rasipalan | இன்றைய ராசிபலன் 6.6.2026: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வ நிலை உயரும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
rasipalan
Published on

மேஷம்

முயற்சி வெற்றி கிட்டும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கூட்டாளிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். பக்குவமாகப் பேசி பாராட்டு பெறுவீர்கள்.

ரிஷபம்

போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார விருத்தி ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் மாறும்.

மிதுனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மனக்கலக்கம் உருவாகும்.

கடகம்

நினைத்தது நிறைவேறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

சிம்மம்

செல்வ நிலை உயரும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் நட்பு ஏற்படும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணம் உண்டு.

துலாம்

பயணம் பலன் தரும் நாள். எதிர்பார்த்தபடியே பணம் வந்து சேரும். சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும். தொழில் சீராக நடைபெறும்.

விருச்சிகம்

வரவு திருப்தி தரும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வரன்கள் முடிவாகும்.

தனுசு

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரியத் தடை ஏற்படும். விரயங்கள் கூடும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.

மகரம்

முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

கும்பம்

கவலைகள் தீரும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

மீனம்

யோகமான நாள். வரவு திருப்தி தரும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியத்தைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com