மேஷம்- வார ராசிபலன் 9.8.2026 முதல் 15.8.2026 வரை

கடன் பிரச்சினைகள் சூரியனைக் கண்ட பனிபோல் படிப்படியாக குறையும்.
Mesham
Published on

மேஷம்

ஆளுமைத் தன்மை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பகவான் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிலும் மதி நுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். கடன் பிரச்சினைகள் சூரியனைக் கண்ட பனிபோல் படிப்படியாக குறையும். கணவன், மனைவி அந்நியோன்யம் கூடும். தாய், தந்தை வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோக நற்பலன் தரும். தொழில் மற்றும் சொத்துக்களுக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். தற்போது சனிபகவான் வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார். எனவே ஏழரைச் சனியின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் அனுபவித்த பிரச்சினைக்கு விடிவு காலம் பிறக்கும். தடைபட்ட குல தெய்வ வழிபாடுகள் நிறைவேறும். ஆன்மீகச் சுற்றலாவிற்கு ஏற்ற காலம். ஆடி அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com