

விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 3-ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தன் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். பண வரவு பல வழிகளில் வரும். கோட்சார கிரகங்கள் அனைத்தும் மேஷ ராசியினருக்கு சாதகமாக உள்ளது. சனி பகவான் வக்ர கதியில் செல்வதால் ஏழரை சனியின் தாக்கம் தணிந்து ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகமும் உள்ளது. ஆடி கிருத்திகை அன்று முருகனை வழிபடவும்.