மேஷம்- வார ராசிபலன் 14.6.2026 முதல் 20.6.2026 வரை

சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் இது உகந்த காலமாகும்.
Mesham weekly rasipalan
மேஷம் வார ராசிபலன்
Published on

மேஷம்

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாயின் 4ம் பார்வை சுக ஸ்தானத்தில் உள்ள உச்ச குருவின் மேல் இந்த ஒரு வாரத்திற்கு மட்டுமே உள்ளது. இந்த குருமங்கள யோக அமைப்பால் பொன் பொருள் சேரும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். மனதில் நல்ல ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும்.

சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் இது உகந்த காலமாகும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். ஆடம்பர மோகம், ஆசை அதிகமாகும்.வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். இதுவரை கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவர். பூர்வ ஜென்ம புண்ணியப்படி இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பீர்கள். செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com