

மேஷம்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் நாள். பிள்ளைகளால் வந்த தொல்லை அகலும். சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.
ரிஷபம்
சிகரம் போல் உயர சிரத்தை எடுக்கும் நாள். தொழிலுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும்.
மிதுனம்
மனச்சுமை குறையும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். பக்கத்து வீட்டாரின் பாசமழையில் நனைவீர்கள்.
கடகம்
அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் கூடும். அதிகாலையிலேயே விரயம் உண்டு. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.
சிம்மம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் இன்று வரும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.
கன்னி
யோகமான நாள். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். பண வரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
நன்மைகள் நடைபெறும் நாள். பொருளாதார நிலை உயரும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
விருச்சிகம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக நலனில் தெளிவு பிறக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். தனவரவு உண்டு. தொழில் லாபம் தரும்.
தனுசு
அலைச்சல் அதிகரிக்கும் நாள், வியாபாரத்தில் போட்டிகள் மேலோங்கும். சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
மகரம்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.
கும்பம்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சிறப்பாக நடைபெறும். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உத்தியோகத்தடை அகலும்.
மீனம்
புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும் நாள். பொருளாதார நிலை உயரும். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.