Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.06.2026 - இந்த ராசிக்காரர்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.06.2026 - இந்த ராசிக்காரர்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள்...
Published on

மேஷம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள், உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பிரயாணத்தின் போது பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும்.

மிதுனம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையும்.

கடகம்

செல்வ நிலை உயரும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.

சிம்மம்

பணத்தேவைகள் பூர்த்தி யாகும் நாள். வெளியுலக தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி

நன்மை கிடைக்கும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

7

துலாம்

நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் லாபம் உண்டு. பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

விருச்சிகம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய புதிய பாதை புலப்படும். பயணங்கள் பலன் தரும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவர்.

தனுசு

வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

மகரம்

ஆரோக்கியம் சீராகும் நாள். செய்தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கும்பம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு புதிய தீர்வு கிடைக்கும். சொந்தங்களின் ஒத்துழைப்பு

மீனம்

செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழும் நாள். குடும்ப பிரச்சினை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகன பராமரிப்பு செலவு உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com