search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாக்.கில் குறிப்பிட்ட முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்: வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம்
    X

    பாக்.கில் குறிப்பிட்ட முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்: வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

    பிரிவினைக்கு பின்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறிய முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி வெள்ளை மாளிகை மற்றும் பாகிஸ்தான் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
    வாஷிங்டன்:

    இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் முஹாஜிர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். கராச்சி பகுதியில் வசித்து வரும் இவர்கள் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசால் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் அந்த பிரிவினர் வெள்ளை மாளிகை மற்றும் வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்னர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முஜாஜிர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், இன்னும் தங்களை இந்தியர்களாகவே அரசு பார்ப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அதிபர் டிரம்ப் தலையிட்டு மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×