search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் தொடர் குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாக். வெளியுறவு மந்திரி சீனா பயணம்
    X

    அமெரிக்காவின் தொடர் குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாக். வெளியுறவு மந்திரி சீனா பயணம்

    தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் நாளை சீனாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் நாளை சீனாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    ஆப்கானிஸ்தானின் தாக்குதல் நடத்தும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதாக அமெரிக்க சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், அமெரிக்க உயர்மட்ட தலைவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு இந்தியாவும் வரவேற்பு தெரிவித்திருந்தது.

    நேற்று முன்தினம் சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய மோடி தீவிரவாதத்திற்கு சில நாடுகள் துணைபோவதாக பாகிஸ்தானை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் நாளை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த பயணத்தில் சீன வெளியுறவு மந்திரி வாங் யி உள்ளிட்ட உயரதிகாரிகளை ஆசிப் சந்தித்து பேச உள்ளார். ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் நிலைப்பாடு, இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் பேச இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×