search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் கருத்துக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதில்கூற வேண்டும்: நத்தம் விசுவநாதன்
    X

    கமல்ஹாசன் கருத்துக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதில்கூற வேண்டும்: நத்தம் விசுவநாதன்

    கமல்ஹாசன் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதில் கூற வேண்டும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கூழ் ஊற்றி பின்னர் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் குடிமகனாக இருக்கும் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. வாக்களித்த அனைவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் அரசைப் பற்றி கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. இப்பிரச்சனையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை மிகவும் அவசியம்.

    சகிப்புத்தன்மை இல்லையென்றால் அரசை வெற்றிகரமாக நடத்த முடியாது. கமல்ஹாசன் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் நாகரீகமான முறையிலும் பதில் அளிக்க வேண்டும்.

    ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியில் உரிய மரியாதை வழங்கப்பட்டது. அவரை மதிக்கவில்லை என்று சொல்வது கற்பனையான குற்றச்சாட்டு. அவர் தொடர்ந்து எங்கள் அணியில் இணைந்து செயல்படுவார் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×