search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயர்லாந்துடனான முதல் ஒருநாள் போட்டி: 138 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி
    X

    அயர்லாந்துடனான முதல் ஒருநாள் போட்டி: 138 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி

    அயர்லாந்து அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 138 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
    சார்ஜா:

    அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி சார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

    இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாவித் அகமதி, இஹ்சானுல்லா ஜனட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தலா பத்து ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் ரஹ்மத் ஷாவுடன், நசிர் ஜமால் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.

    நசிர் ஜமால் 53 ரன்களிலும், ரஹ்மத் ஷா 50 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த அஸ்கார் ஸ்டானிக்சாய் 2 ரன்களிலும், மொகமது நபி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஆப்கானிஸ்தான் அணி 32.6 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.



    தொடர்ந்து களமிறங்கிய குல்பபின் நயிப் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரஷித் கான் மற்றும் ஷபிகுல்லா ஷபிக் இறுதி கட்டத்தில்  அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் இறங்கினர். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 48 ரன்களும், ஷபிகுல்லா ஷபிக் 36 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து அணி பந்துவீச்சில் பாயித் ரங்கின் 4 விக்கெட்களும், டிம் முர்தங் 3 விக்கெட்களும், கெவின் ஓ பிரெயின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில்லியம் போர்டர்பீல்டும், பால் ஸ்டெர்லிங்கும் களமிறங்கினர். ஸ்டெர்லிங் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்தவர்களும் ஆப்கான் அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டெர்லிங் 35 ரன்களும், ஸ்டூவர்ட் பாயிண்டர் 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அயர்லாந்து அணி 31.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாயிண்டர் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முஜீப் சத்ரான் 4 விக்கெட்களும், ரஷித் கான் 3 விக்கெட்களும், தவ்லத் சத்ரான் 2 விக்கெட்களும், மொகமது நபி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம் 138 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. நான்கு விக்கெட்கள் வீழ்த்திய ஆப்கான்ஸ்தான் அணியின் முஜீப் சத்ரான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
    Next Story
    ×