search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டி-20: இந்தியா ரன் குவிப்பு - நியூசி. 7 விக்கெட் இழந்து திணறல்
    X

    முதல் டி-20: இந்தியா ரன் குவிப்பு - நியூசி. 7 விக்கெட் இழந்து திணறல்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 202 ரன்கள் குவித்துள்ள நிலையில், நியூசிலாந்து அணி 99 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
    டெல்லி:

    கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1–2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது. இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவின் கடைசி சர்வதேச போட்டி என்பதால் அவர் அணியில் இடம் பெற்று உள்ளார். அதே போல் ஷ்ரேயஸ் ஐயர் அணியில் உள்ளார்.

    போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாட தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். 16.2 வது ஓவர் வரையில் இவர்களுடைய கூட்டணியை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் அசைக்க முடியவில்லை. ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா நியூசிலாந்தின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். பந்துக்களை சிக்சர், பவுண்டரி என சிதறடித்தனர்.

    இந்திய அணி 16.2 வது ஓவரில் 158 ரன்களை எடுத்து இருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் அசுர வேகத்தில் சதம் அடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என பார்க்கப்பட்டது. ஆனால் சோதி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து 80 ரன்களில் (52 பந்துக்கள், 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) ஷிகர் தவான் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சவுதி பந்து வீச்சில் ஷாட் அடிக்க லாதம் கேட்ச் பிடித்தார். ஹர்திக் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் களத்தை விட்டு வந்த வேகத்தில் சென்றார்.

    இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுடன், கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். வீராட்டும் இரண்டு சிக்சர்களை விளாசினார். மறுமுனையில் சதம் நோக்கி விளையாடிய ரோகித் சர்மாவும் 80 ரன்களில் அவுட் ஆனார். 18.6 வது ஒவரில் இந்தியா 185 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் பவுல்ட் பந்து வீச்சில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 55 பந்துக்களை எதிர்க்கொண்ட ரோகித் சர்மா 6 பவுண்டர்கள் மற்றும் 4 சிக்சர்களை அடித்து அசத்தினார். விராட் கோலியுடன் கை கோர்த்த டோனியும் சிக்சருடன் ஆட்டத்தை தொடங்கினார். விராட் கோலியும் மூன்றாவது சிக்சரை அடித்தார்.

    இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கப்தில் மற்றும் முன்ரோ ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினர்.

    இதனையடுத்து ஆட வந்த கேப்டன் வில்லியம்சன் சிறிது நிலைத்து நின்று ஆட, ஹர்திக் பாண்டியா பிடித்த அருமையான கேட்ச் ஒன்றில் ஆட்டமிழந்தார். பின்னர் களத்திற்கு வந்த புரூஸ் 140 ரன்களிலும், க்ரந்தோம் ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்.

    14 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி திணறி வருகிறது. இன்னும் 35 பந்துகளில் 113 ரன்கள் எடுக்கவேண்டிய கடினமான அந்த அணி ஆடி வருகின்றது.
    Next Story
    ×