search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்தை வென்றது தென்ஆப்பிரிக்கா
    X

    வங்காளதேசத்தை வென்றது தென்ஆப்பிரிக்கா

    தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    புளோம்பாண்டீன்:

    தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தென்ஆப்பிரிக்காவில் உள்ள புளோம்பாண்டீன் நகரில் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயின்டான் டி காக் 59 ரன்களும், டிவில்லியர்ஸ் 49 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய வங்காளதேச அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி 2 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    Next Story
    ×