search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி: தமிழ்நாடு - திரிபுரா இடையேயான லீக் போட்டி டிராவில் முடிந்தது
    X

    ரஞ்சி டிராபி: தமிழ்நாடு - திரிபுரா இடையேயான லீக் போட்டி டிராவில் முடிந்தது

    சென்னையில் நடந்த தமிழ்நாடு மற்றும் திரிபுரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபி லீக் போட்டி டிராவில் முடிந்தது.

    சென்னை:

    ரஞ்சி டிராபியின் 2-வது லீக் ஆட்டம் 14-ம் தேதி தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு - திரிபுரா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த திரிபுரா 258 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் எஸ்.கே. பட்டேல் 99 ரன்னும், யாஷ்பால் சிங் 96 ரன்னும் எடுத்தனர். தமிழ்நாடு அணியின் கே. விக்னேஷ் 4 விக்கெட்டும், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது, தமிழ்நாடு 88 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்டம் தடைபட்டது. அன்று 7 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. தமிழ்நாடு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் (159), அபிநவ் முகுந்த் (76), பாபா இந்திரஜித் (89) ரன்கள் எடுத்தனர்.
     


    இதையடுத்து 4-ம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கிய உடன் தமிழ்நாடு அணி டிக்கெர் செய்தது. இதையடுத்து திரிபுரா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிஷால் கோஷ் - உதியன் போஸ் ஆகியோர் களமிறங்கினர். கோஷ் 3 ரன்களிலும், போஸ் 12 ரன்களிலும் ரகில் பந்துவிச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய ராஜேஷ் பனிக் 19 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஸ்மித் பட்டேலுடன் யாஷ்பால் சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 34 ஓவர்களில் திரிபுரா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது வெளிச்சம் குறைவாக இருப்பதால் நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். தொடர்ந்து வானிலை மோசமாக இருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது.

    இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. தமிழ்நாடு அணியின் வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து 24-ம் தேதி தொடங்கும் போட்டியில் தமிழ்நாடு அணி, பலம்வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×