search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வெல்லுமா?: இறுதிப்போட்டியில் நாளை இங்கிலாந்துடன் மோதல்
    X

    பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வெல்லுமா?: இறுதிப்போட்டியில் நாளை இங்கிலாந்துடன் மோதல்

    பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    லண்டன்:

    11-வது பெண்கள் உலக கோப்கை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். கடந்த 15-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது. இதன் முடிவில் இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

    நியூலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. முதல் அரை இறுதியில் இங்கிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    2-வது அரை இறுதியில் இந்தியா 76 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. ஸ்யிலழி மதானா, பூனம், ஹர்மன்பிரீத்கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். மிதாலிராஜ் 392 ரன்னும், ஹர்மன்கிரீத்கவுர் 308 ரன்னும், பூனம் ரவுத் 295 ரன்னும் எடுத்து உள்ளனர்.

    பந்துவீச்சில் கோஸ்வாமி, தீப்தி சர்மா, பூனம் யாதவ், பாண்டே ஆகியோர் அசத்தி வருகிறார்கள். முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

    லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளதால் இந்தியா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

    ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வி மட்டுமே சந்தித்தது. பலம் வாய்ந்த அந்த அணியில் வின்பீல்டு, சகரா டெய்லர், பியூமான்ட், வில்சன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகவும் 3 முறை சாம்பியனான இங்கிலாந்து 4-வது தடவையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
    Next Story
    ×