search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமேதியில் ராகுல் வருகைக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - வேறு பாதையில் சென்றார்
    X

    அமேதியில் ராகுல் வருகைக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - வேறு பாதையில் சென்றார்

    அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தியின் பேரணிக்கு எதிராக பா.ஜ.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பாதுகாப்பு கருதி அவரை போலீசார் வேறு பாதையில் அனுப்பி வைத்தனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்வதற்காக நேற்று லக்னோ நகரை வந்தடைந்தார். முன்சிகஞ்ச் பகுதியில் இன்று பொதுமக்களின் குறைகளை ‘ஜனதா தர்பார்’ நிகழ்ச்சியின் மூலம் கேட்டறிந்தார்.



    நூற்றுக்கும் அதிகமானவர்களின் குறைகளையும், குமுறல்களையும் பொறுமையாக கேட்டறிந்த அவர், அங்கிருந்து முசாபிர்கானா பகுதிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், கவுரிகஞ்ச் பகுதி வழியாக முசாபிர்கானா நோக்கி செல்லும் பாதையில் ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே வாக்குவாதமும் லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதனப்படுத்தினர். இதனால், பாதுகாப்பு கருதி ஜமோ சாலை வழியாக ராகுல் காந்தியை போலீசார் அனுப்பி வைத்தனர்.



    இதேபோல், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள பர்ஷ்தேர்பூர் பகுதியிலும் ராகுலுக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அமேதி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க முடியாமல் ராகுல் காந்தி ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல நேரிட்டது. #tamilnews
    Next Story
    ×