search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் பா.ஜனதா அலை வீசுகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
    X

    நாடு முழுவதும் பா.ஜனதா அலை வீசுகிறது: தமிழிசை சவுந்தரராஜன்

    குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் வெற்றியின் மூலம் நாடு முழுவதும் பாரதிய ஜனதா அலை வீசுகிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    அவனியாபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு அங்கு செல்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குஜராத், இமாச்சல பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளன. ஆனால் தட்டு தடுமாறி வெற்றி பெற்றுள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. பாரதிய ஜனதா வெற்றியை அவர் ஓப்புக்கொள்ள வேண்டும்.

    நாடு முழுவதும் பா.ஜ.க. அலை வீசுகிறது. எங்கள் கட்சி ஆளும் மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் தமிழகம் மட்டும் பின்தங்கி வருகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி நிதி முழுவதுமாக பல்வேறு நலத்திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் 2 திராவிட கட்சிகளும் ரூ. 30 லட்சம் கோடிக்கு மேல் கடன்களை தான் வாங்கியுள்ளது. 2ஜி ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.


    ஆர்.கே. நகர் தேர்தலில் ரூ.150 கோடி பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். பணப்பட்டுவாடா காரணத்தை கூறி தேர்தலை ரத்து செய்யக் கூடாது என திருமாவளவன் கூறுகிறார். அப்படியென்றால் பணம் கொடுப்பவர்களுக்கு அவர் ஒத்துழைக்கிறாரா?

    ஆர்.கே. நகர் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்து வருகிறார்கள். அந்த தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை. தேர்தல் வந்தால் டாஸ்மாக்கில் தான் வளர்ச்சி இருக்கிறது.

    ஆர்.கே. நகர் தொகுதி வளர்ச்சியடைய பா.ஜனதாவுக்கு ஓட்டளிக்க வேண்டும். இந்த தேர்தல் மூலம் பா.ஜனதா தமிழகத்தில் பலமாக காலூன்றும்.

    கன்னியாகுமரியில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, ராணுவம் ஈடுபட்டு வருகின்றன. ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு முறையாக மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை. கன்னியாகுமரி மீனவர்கள் கூறும் தகவலும், மாநில அரசு கூறும் தகவலும் குளறுபடியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×