search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் திருட்டு காரை விற்ற கணவன்-மனைவிக்கு சிறை
    X

    திண்டுக்கல்லில் திருட்டு காரை விற்ற கணவன்-மனைவிக்கு சிறை

    திண்டுக்கல்லில் திருட்டு காரை விற்ற தம்பதிக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து திண்டுக்கல் ஜே.எம்.3 கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பூச்சிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சண்முகம் மனைவி குமுதவள்ளி. இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரிடம் திண்டுக்கல் மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்த ரமேஷ் (வயது 50), அவரது மனைவி சாந்தா ஆகியோர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.

    அவர் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் கேரளாவில் இருந்து கொண்டு வந்த காரை குமுதவள்ளிக்கு ரூ.1.45 லட்சத்துக்கு விற்பனை செய்தார். இது கேரளாவில் திருடப்பட்ட கார் என்று புகார் வரவே அதனை கேரள போலீசார் எடுத்துச் சென்றனர்.

    இது குறித்து குமுதவள்ளி நகர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் மின் வாரிய பொறியாளர் ரமேஷ், சாந்தா, மதுசூதனன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் ஜே.எம்.3 கோர்ட்டில் இந்த விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் போதே மதுசூதனன் தலைமறைவானார். இந்த வழக்கில் ரமேஷ் மற்றும் சாந்தாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு தீபா தீர்ப்பளித்தார்.
    Next Story
    ×