search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
    X

    திருச்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

    திருச்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கட்டிட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி கோ.அபிசேகபுரம் கோட்டம் 52-வது வார்டு தெற்கு ராமலிங்கம் நகர் 1 முதல் 5 வரை உள்ள தெருக்களில் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு கொசு உற்பத்தியாகுவதை வீடுகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி அபேட் மருந்து தெளித்து, புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை மாவட்ட கலெக்டர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் இன்று (14.11.2017) ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    அப்போது 52-வது வார்டு தெற்கு ராமலிங்கம் நகர் மெயின் ரோட்டில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ததில் இந்த கட்டிடத்தில் அதிகளவில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டதில் டெங்கு கொசு உற்பத்தியாகும் கொசு புழுக்கள் அதிக அளவில் காணப்பட்டது.

    உடனடியாக கொசுஒழிப்பு பணியாளர்கள் கொண்டு அழிக்கப்பட்டது. இக்கட்டிட உரிமையாளர் சிவக்குமாருக்கு ரூ.50,000 அபதாரம் விதிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க சுத்தமாக வைத்து கொள்ள உத்தரவிட்டார்.

    குறிப்பாக புதிய கட்டிடங்கள் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் உள்ள தற்காலிக தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் கொசு புழு உற்பத்தியாவதை கட்டிட உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற வேண்டும், மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்கு மாறும், காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு பொது மருத்துவனைக்கு செல்லுமாறும் மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்தார்.

    இந்த ஆய்வில் நகர் நல அலுவலர் டாக்டர் ஆர்.சித்ரா, சுகாதார அலுவலர் தலைவிருச்சான், உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் இளநிலை பொறியாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×