search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.
    X
    நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.

    நாகராஜா கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில், ஆனி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    குமரி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு, குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும், கேரள போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.


    நாகர் சிலைக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்ட போது எடுத்த படம்.

    அதன்படி, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள், நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி, மஞ்சள் பொடி வைத்து வழிபடுவர். இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும், கடைசிநாளிலும் நாகராஜா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    ஆனி மாதத்தின் கடைசி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆண்களும், பெண்களுமாக ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள், அங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள்பொடி வைத்து வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×