

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி நாளை (திங்கட்கி ழமை), 27-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 3,10,17, 24,31-ந்தேதிகளில் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூ ருக்குக்கும், வருகிற 21, 28, ஆகஸ்டு 4, 11, 18, 25, செப்டம்பர் மாதம் 1 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து மங்களூ ருக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதேபோல் சென்னை சென்ட்ரல், கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் (06117/06118) அறி விக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் வடக்கு, மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் (06093/06094) இயக்கப்படுகின்றன.
வரும் ஆகஸ்ட் 9, 16, 23, 30, செப்டம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கும், மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 10, 17, 24, 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரெயில்கள் (06147/06148) இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில்கள், அலுவா, திரிச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வருகிற ஆகஸ்ட் 13, 15, 20, 22, 27, 29, செப்டம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ர லில் இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 14, 16, 21, 23, 28, 30, செப்டம்பர் 4, 6 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ர லுக்கும் சிறப்பு ரெயில்கள் (06117/06118) இயக்கப்படுகின்றன. வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படு கின்றன.
இந்த ரெயில்கள், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திரிச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.