‘தாய்மொழியை தாண்டி அனைவரும் கூடுதலாக ஒரு இந்திய மொழியையாவது கற்றுகொள்ள வேண்டும்’ - அமித்ஷா

நம் நாட்டில் குறுகிய மனப்பான்மைக்கு இடமில்லை.
‘தாய்மொழியை தாண்டி அனைவரும் கூடுதலாக ஒரு இந்திய மொழியையாவது கற்றுகொள்ள வேண்டும்’ - அமித்ஷா
Published on

நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் வகையில், மாணவர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து, கூடுதலாக ஒரு இந்திய மொழியையாவது கற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலக வளாகத்தில், ‘மொழிகளுக்கான அருங்காட்சியம்’ திறப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“இந்த அருங்காட்சியகம் 22 இந்திய மொழிகளின் பரிணாம வளர்ச்சியை காட்சிப்படுத்தும். இந்த அருங்காட்சியகத்திற்கான அறிவிப்பை 2020-ல் பிரதமர் மோடி வெளியிட்டார். நம் நாட்டில் குறுகிய மனப்பான்மைக்கு இடமில்லை. குறுகிய எண்ணங்கள் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்க முடியாது.

இந்தியாவின் மொழி பன்முகத்தன்மை நாட்டின் வளமான பாரம்பரியத்தைத் தாங்கி நிற்கிறது. மொழியின் மூலமாக மட்டுமே ஒரு நாட்டின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, ஒவ்வொரு மாணவரும் தங்களது தாய்மொழியைத் தாண்டி, கூடுதலாக ஒரு இந்திய மொழியையாவது கற்றுக்கொள்வது அவசியமாகும்.” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியும் கலந்துகொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com