

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் எமோஷனல் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சில நேரங்களில், நீங்கள் இறுதியாக உங்கள் அமைதியைக் கண்டறிய தேவையற்ற முட்டுக் கட்டைகளை (DEAD ENDS) கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இன்று, அந்த அமைதி என்னைத் தேடி வந்துள்ளது.
இன்றிலிருந்து நான் என் குரலைத் தேர்ந்தெடுக்கிறேன், என் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை, பயமும் இல்லை. எனக்கான பாதையை நோக்கி நான் பயணிக்கிறேன்.
நான் கிட்டத்தட்ட மறந்துபோன என் வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளேன். நீண்ட நாட்களாகத் தம்மால் சொல்ல முடியாமல் தவித்த சில விஷயங்களை இப்போது வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், தமக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி.
இது எனது குணமாகுதலுக்கான (HEALING), சுதந்திரத்திற்கான மற்றும் எனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு புதிய தொடக்கம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் துருவ்- அனுபமா காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் பிரேக் அப் ஆனதாக தகவல் பரவியதை தொடர்ந்து, அனுபமாவின் இஸ்ன்டா பதிவு ரசிகர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.