search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பி ராமையா"

    • 'இங்க நான் தான் கிங்கு'. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ளது.
    • 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும்.

    கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், 'இங்க நான் தான் கிங்கு'. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    அதில் நடிகர் சந்தானம் பேசியதாவது…

    'இங்க நான் தான் கிங்கு' படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார்.

    அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றேன். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார்.

    சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார்.

    தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார்.

    என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். 'கட்டா குஸ்தி' படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள்.

    90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி. என கூறினார்

     

    தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.  இதற்கு முன் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை போலவே இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது படத்தின் ப்ரொமோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
    • தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களுள் சமுத்திரக்கனியும் ஒருவர்

    சின்னதிரையில் இயக்குனராக அறிமுகமாகிய சமுத்திரக்கனி அதற்கடுத்து நாடோடிகள் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என பல படங்களை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

    தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களுள் சமுத்திரக்கனியும் ஒருவர். பல தெலுங்கு நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.

    சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள 'ராமம் ராகவம்' பட டீஸர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

    இதில் இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, அப்பாக்கள் பற்றிய கதை என்றாலே தான் எமோஷனலாகி விடுவதாகப் பேசியுள்ளார். நிகழ்வில் பேசிய அவர், "அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல கதைகளில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் அப்பாவாக நடித்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு மாதிரி. ஒருமுறை கூட அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.

    'ராமம் ராகவம்' படம் மக்களிடம் போய் சேர வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு முறையும் சின்னப் படம் எடுத்துவிட்டு அதைக் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியதாக உள்ளது. இப்படித்தான் இதற்கு முன்பு நான் நடித்த சில சிறிய பட்ஜெட் படங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை" என்று ஆதங்கத்தைக் கொட்டினார். அதைத்தொடர்ந்து இயக்குனர் பாலா சமுத்திரக்கனியை பாராட்டி சில வார்த்திகளை பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம்.
    • நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும்.

    விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கவுரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் 'உழவர் விருதுகள் 2024' விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள்.


    இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். மேலும் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதோடு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.


    இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசும்போது, "ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள். அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது.


    சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்திலுமே வெற்றி பெறும் போது விழா வைத்துக் கொண்டாடுகிறோம். எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் நிலையிலும் நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும் என்று தான் உழவர் விருதுகள் விழாவினைத் தொடங்கினோம்.


    இது 5-வது ஆண்டு விழா. பல்வேறு வேளாண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதின் மூலம் அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறோம். வரும் காலங்களிலும் இதுப்போல விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களை அடையாளப்படுத்தி கவுரவப்படுத்துவதோடு, விவசாயத்திற்கான பங்களிப்பையும் உழவன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செய்யும்" என கூறினார்.

    • அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • ஐஸ்வர்யா அர்ஜுன் 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் -நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான 'சொல்லிவிடவா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.


    நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்தியை நடிகர் செந்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செந்தில், உமாபதி, நடிகர் அர்ஜுன் மகளை திருமணம் செய்யப்போகிறார் என்று கூறினார்.


    நடிகர் உமாபதி 2017-ஆம் ஆண்டு வெளியான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் அறிமுகமான. பின்னர், 'மணியார் குடும்பம்', 'திருமணம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். உமாபதி 2021-ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள திரைப்படம் 'ராஜாகிளி'.
    • இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார். கோபிநாத், கேதார்நாத் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுதர்சன் ஆர் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'ராஜா கிளி'.
    • இப்படத்தை நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட தம்பி ராமையா இயக்குகிறார்.

    'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் 'ராஜா கிளி'. இப்படத்தை நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட தம்பி ராமையா இயக்குகிறார். 'சாட்டை', 'அப்பா', 'வினோதய சித்தம்' ஆகிய படங்களை தொடர்ந்து சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது.

    இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

     

    இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக தமனிடம் சீடராக பணியாற்றிய தினேஷ், படத்தொகுப்பாளராக ஆர். சுதர்சன் பணியாற்றுகின்றனர். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது.

    இப்படம் குறித்து இயக்குனர் தம்பி ராமையா கூறியது, "இந்தப் படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தில் நான் இயக்குவதற்கு காரணமே, சுரேஷ் காமட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த இயக்குனரும் கூட. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்களாக இருக்கும் வெகு சிலரில் சுரேஷ் காமாட்சியும் ஒருவர்.

     

    கிட்டத்தட்ட 12 இயக்குனர்களிடம் இந்தக் கதையை கூறிவிட்டு, அதன் பின்னர் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேஷ் காமாட்சி. பெருந்திணைக் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ஒரு வாழ்வியல் கதை என்பதால், ஒரு மனிதனின் சுயசரிதை என்பதால் இதை நானே இயக்குவது தான் சரியாக இருக்கும் என மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளேன்.

     

    இந்த கதையில் நிகழ்வதெல்லாம் சாத்தியமா என்றால், இது நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி தான் உருவாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வு ஏற்படும். எல்லா தரப்பு வயதினருக்குமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சுழன்று கொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்கள் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் தங்களை தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள முடியும்" என்றார்.

    ×