search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோகோவிச்"

    • இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், சிலி நாட்டின் அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே டபிலோ அதிரடியாக ஆடினார். இதனால் டபிலோ 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    • சிட்சிபாஸ் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான சின்னரை 2-1 என வீழ்த்தியிருந்தார்.
    • காஸ்பர் ரூட் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை 2-1 என வீழ்த்தியிருந்தார்.

    மான்டி கார்லோ டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் 8-ம் நிலை தரநிலை வீரரான நார்வேயினி் காஸ்பர் ரூட்- 12-ம் தரநிலை வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    தரநிலையில் 1-ம் இடம் பிடித்திருந்த ஜோகோவிச்சை வீழ்த்தி ரூட், 2-ம் நிலை வீரர் சின்னரை வீழ்த்தியிருந்த சிட்சிபாஸ்க்கு கடும் நெருக்கடி கொடுப்பார். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் எனக் கருதப்பட்டது.

    ஆனால் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-1 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும் எளிதாக கைப்பற்றி ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    ரூட் அரையிறுதியில் ஜோகோவிச்சை 6-4, 1-6, 6-4 என வீழ்த்தியிருந்தார். சிட்சிபாஸ் சின்னரை 6-4, 3-6, 6-4 என வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 4-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட், சிட்சிபாசுடன் மோத உள்ளார்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் டி மினாருடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் சிட்சிபாஸ், சின்னருடன் மோதுகிறார்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் இத்தாலிய வீரர் முசெட்டி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரர் லாரன்சோ

    முசெட்டியுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் டி மினாருடன் மோதுகிறார்.

    • இத்தாலி வீரர் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.
    • 2019-ம் ஆண்டுக்கு பின் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ஜோகோவிச் திரும்பியுள்ளார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லூகா நார்டி ஆகியோர் விளையாடினர்.

    முதல் செட்டை 4-6 என கோட்டை விட்ட ஜோகோவிச், அடுத்த சுற்றை 6-3 என கைப்பற்றினார். இதனால் 3-வது செட்டை கைப்பற்றும் போட்டி பரபரப்பாக நடந்தது.

    இதில் லூகா நார்டி 6-3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தார். இதன்மூலம் ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார்.

    2019-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ஜோகோவிச் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் அரையிறுதியின் முதல் 2 செட்டை சின்னர் எளிதில் வென்றார்.
    • மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.

    இறுதியில், சின்னர் 6-1, 6-2, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க வீரரை 7-6, 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேற்றம்.
    • இவர் 58 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல்நிலை வீரரும், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் ஜோகோவிச் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் 4-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கவூப் 7-6 (8-6), 6-7 (3-7) 6-2 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை மர்டா கோஸ்டியூக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • பிரான்ஸ் வீரரை 6-0, 6-0, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேற்றம்.
    • 58 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல்நிலை வீரரும், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த அட்ரியன் மேனா ரினோவை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-0, 6-0, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 44 நிமிட நேரம் தேவைப்பட்டது. ஜோகோவிச் கால்இறுதியில் டெய்லர் பிரீட்சை (அமெரிக்கா) சந்திக்கிறார்.

    காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம், அதிக முறை காலிறுதிக்கு முன்னேறிய பெடரர் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். பெடரர் 58 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் காலிறுதிக்கு முன்னேறியிருந்தார். அதை தற்போது ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (ரஷியா) 4-வது சுற்றில் அமந்தா அனிஸ்மோவாவை (அமெரிக்கா) சந்தித்தார். இதில் ஷபலென்கா 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கவூப் 6-1, 6-2 என்ற கணக்கில் மக்டலினாவை (போலந்து) வீழ்த்தினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆண்ட்ரே ரூப்லெவ்- செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
    • 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்- தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதினார்.

    மெல்போர்ன்:

    ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ரூப்லெவ் 6-2, 7-6 ( 8-6), 6-4 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். வரும் 21ம் தேதி நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை ரூப்லெவ் எதிர்கொள்ள உள்ளார்.

    மற்றொரு 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), தாமஸ் மார்ட்டின் எட்செவரி (அர்ஜென்டினா) உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-3 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சின் 100-வது போட்டியாக அமைந்துள்ளது. 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோகோவிச் அதில் 92-ல் வெற்றி பெற்றுள்ளார்.

    • நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, பிரன்டா புருவிர்தோவாவை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மெல்போர்ன்:

    'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 10 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 7-6 (8-6), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி 37 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 75-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீரர் டாமஸ் மசாக் 6-4, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாயோவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.

    மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), டெய்லர் பிரைட்ஸ் (அமெரிக்கா), செபாஸ்டியன் பயஸ் (அர்ஜென்டினா), கரன் கச்சனோவ் (ரஷியா), தாமஸ் மார்ட்டின் எட்ச்வெர்ரி (அர்ஜென்டினா), செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் நுழைந்த பிரன்டா புருவிர்தோவாவை (செக்குடியரசு) விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான கோகோ காப் (அமெரிக்கா) 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கரோலின் டோலிஹிட்டை வீழ்த்தினார்.

    உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 0-6, 2-6 என்ற நேர்செட்டில் 16 வயது ரஷிய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதேபோல் முன்னாள் சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-1, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட வீராங்கனையான மரியா டிமோபீவாவிடமும் (ரஷியா), 8-ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரி (கிரீஸ்) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ரஷியாவின் எலினா அவனிஷியானிடமும் வீழ்ந்தனர்.

    மற்ற ஆட்டங்களில் ஹாடட் மையா (பிரேசில்), ஸ்டாம் ஹூன்டெர் (ஆஸ்திரேலியா), அலிசியா பார்க்ஸ் (அமெரிக்கா), பார்பரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), லிசி சுரென்கோ (உக்ரைன்), அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா), டியானி பேரி (பிரான்ஸ்), அனஸ்டாசியா ஜகாரோவா (ரஷியா) ஆகியோரும் வெற்றி கண்டனர்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது.
    • ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்ன் பூங்காவில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் நட்புரீதியான டென்னிஸ் விளையாடி அசத்தினார்.

    இரு நட்சத்திரங்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியானது ஆஸ்திரேலிய ஓபன் 2024- க்கு ஒரு முன்னோடியாக திகழும்.

    ஸ்மித் கிரிக்கெட்டில் பெயர் பெற்றவர் என்றாலும், அவர் ஜோகோவிச்சின் ஒரு சர்வீஸை தாக்கு பிடிப்பாரா என்ற கோணத்தில் ரசிகர்கள் எதிர் நோக்கி இருந்தனர். அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அவரது சர்வீஸை ஸ்மித் கோர்ட்டிற்குள் திருப்பி அனுப்பினார். இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட ஜோகோவிச் கூட அதிர்ச்சியடைந்தார். கூட்டத்தில் இருந்த ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் ஸ்மித்க்கு தலைவணங்கி தனது பாராட்டை ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.

    அதன்பிறகு ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். அவர் முதல் பந்தை அடிக்க முற்பட்டார். அது பேட்டில் படவில்லை. உடனே அடுத்து பந்து போடப்பட்டது. பேட் நமக்கு செட் ஆகாது என தெரிந்து கொண்ட ஜோகோவிச் மறைத்து வைத்திருந்த டென்னிஸ் மட்டையால் பந்தை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    இவர்கள் இருவரும் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×