search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஐடி மெட்ராஸ்"

    • JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படும்.

    JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்கலாம். ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்று தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், "இந்தியாவின் மதிப்புமிக்க ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் கல்வி பயிலும் வாய்பை நிறைவேற்ற, JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    லட்சக்கணக்கான சம்பளத்துடன் 11.5 லட்சம் வேலைவாய்ப்பு நிறைந்த தரவு அறிவியல்(Data Science) பட்டப்படிப்பையும், மின்னனு துறையில் தரம் வாய்ந்த மாணாக்கர்களை உருவாக்கும் மிண்ணணு அமைப்புகள் (Electronic Systems) பட்டப்படிப்பையும் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்திலும், அறிவாற்றலிலும் சிறந்த மாணாக்கர்களை உருவாக்க சுய கற்றல் முறையில் இணையதளம் மூலமாக படித்து, நேரடியாக தேர்வுகளை எதிர்கொண்டு 4 வருட ஐஐடி மெட்ராஸ் பட்டப்படிப்பினை பெறலாம்.

    தகுதித் தேர்வின் அடிப்படையில் BS பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணாக்கர்கள் படிக்கும் காலத்திலேயே வேறு ஒரு கல்லூரியில் தங்களது விருப்பமான பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே BS பட்டப்படிப்பினை பயிலலாம்.

    இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படும். தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மூலம் பயில்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள், மற்றும் கல்வித்தகுதியை மேம்படுத்த விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (மே 12) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. 11, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் பெற்றோருடன் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

    பதிவு செய்ய : http://lnkiy.in/iitdegree

    TAHDCO : https://iei.tahdco.com/iit_reg.php

    மேலும் பட்டப் படிப்பு குறித்த தகவல்களுக்கு

    Data Science-study.itm.ac.in/ds

    Electronic Systems-study atm.ac.in/es

    குறிப்பு - விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் மே 20. 2024

    tamilnaduvolunteers@gmail.com

    9087293339

    • பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
    • மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலுரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பனோஸ் தனது பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.

    முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்களை தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகளை தலைமை பதவிகளில் நியமித்து இருந்தது. அதன்படி தவுலுரி சர்பேஸ் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    பராகின் புதிய பதவிகளில் பணியாற்ற விரும்பியதை அடுத்து, தவுலுரி விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவுலுரி ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பட்டம் பெற்றவர் ஆவார். இதன் மூலம் இவர் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பட்டியலில் தவுலுரி இணைந்துள்ளார்.

    • இம்மாத துவக்கத்தில் 32 வயதான பிஎச்டி மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
    • மார்ச் மாத வாக்கில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் இதே வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள தங்கும் விடுதி அறையில் மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    உயிரிழந்த மாணவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் இரசாயன பொறியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். உயிரிழந்த மாணவர் உடலை மீட்ட காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.

    விசாரணையில் இந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டால், இந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸ்-இல் பதிவான நான்காவது தற்கொலை சம்பவமாக இது இருக்கும். முன்னதாக இம்மாத துவக்கத்தில் 32 வயதான பிஎச்டி மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக மார்ச் மாதத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் இதே வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான இந்த மாணவர் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இதுதவிர பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆய்வு மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். 

    • குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

    சென்னை:

    இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு பத்தாண்டுகளோ, அதற்கும் அதிகமாகவோ தேவைப்படும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

    அடுத்து வரும் 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகள் இதில் அடங்கும்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

    ஸ்மார்ட்பாக்சர் என்ற குறைந்த செலவில் அமைக்கப்பட்ட பகுப்பாய்வுத் தளம், அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி குத்துச்சண்டை மதிப்பீடுக்கான நான்கு முக்கிய அம்சங்களைக் கணக்கிட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய உதவும். விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித் திறனை மேம்படுத்த இது உதவும். இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் ரங்கநாதன் ஸ்ரீனிவாசன் கூறும்போது, பயிற்சியாளருக்கும், உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் பாலமாக செயல்படும். ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு இருக்கும் பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்மார்ட்பாக்சரும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

    ×