என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CCTV Cameras"
- சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 15 மண்டலங்களில் மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
- 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த, 6.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ், 15 மண்டலங்களில் மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், விரிவாக்கத்திற்கு முன்பு இருந்த 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 6.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள சென்னை மாநகராட்சி. இந்தப் பணிக்கான டெண்டருக்காக, வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிக்கூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரும் நோக்கிலும், சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு அறைக்கு 16 கேமராக்கள் உள்ளன.
- சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி, ஈரோடு சிசிடிவி கேமராக்கள் பழுதான நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னையிலும் ஆய்வு செய்தார். உடன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு அறைக்கு 16 கேமராக்கள் உள்ளன. போதுமான கேமராக்கள் இருக்கிறதா, முறையாக வேலை செய்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
சென்னையில் 3 தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில், 4 அடுக்கு பாதுகாப்பு டோப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு 140 போலீசார் வீதம், 3 ஷிப்ட் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்
- நகை வியாபாரியை தாக்கி ரூ.3½ லட்சம் பறிப்பு
- ஒரு வீட்டை காட்டி அதை கட்டவே பணம் வேண்டும் என்றும் தன் அம்மா உள்ளே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் காளியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் பிரகாஷ் (வயது 26). பழைய மற்றும் அடகு வைத்த நகைகளை மீட்டு வாங்கி விற்று வியாபாரம் செய்து வருகிறார்.
செல்போனில் அழைப்புடந்த 24-ந் தேதி ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை ரகு என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கொம்பாக்கம் பகுதியில் நாங்கள் கட்டி வரும் வீட்டிற்கு பணம் தேவைப்படுவதால் எங்களிடம் உள்ள நகைகளை விற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து நேற்று முன் தினம் மதியம் விழுப்புரத்தில் இருந்து ரூ. 3,64,000 பணம் எடுத்து க்கொண்டு வந்துள்ளார்.
செல்போ னில் ரகுவை தொடர்பு கொண்டபோது கொம்பாக்கம் வாலிபால் மைதானம் அருகே வந்து கூப்பிடும்படி கூறினார்.
ஒதியம்பட்டு பகுதியில் ஒரு வெள்ளை கலர் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் அருகில் இறக்கத்தில் பாதி கட்டியிருந்த ஒரு வீட்டை காட்டி அதை கட்டவே பணம் வேண்டும் என்றும் தன் அம்மா உள்ளே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனே பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, உள்ளே சென்று நின்றவுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பாட்டிலால் பிரகாஷின் தலையில் அடித்துள்ளார்.
பிரகாஷ் திரும்பிப் பார்த்தபோது அந்த வீட்டில் மேலும் 2 பேரும் பக்கவாட்டில் இருந்து ஒருவரும் ஓடி வந்து அவரை தாக்கி பையையும், பிரகாஷின் போனையும் பிடுங்கி கொண்டு கருவேல காட்டிற்குள் தப்பி ஓடினர்.
பிரகாஷ் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் சரியான கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரகாஷின் செல்போனை அவர்கள் திருடிச்சென்றி ருப்பதால் அதன் சிக்னலை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கானும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
- நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது சொந்த நிதியில் இருந்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு 6 சி.சி.டி.வி. காமிராக்களை, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் வழங்கினார்.
களக்காடு:
களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது சொந்த நிதியில் இருந்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு 6 சி.சி.டி.வி. காமிராக்களை, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் வழங்கினார்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், அமலன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டாரம், நகராட்சி, நாங்குநேரி மேற்கு வட்டாரம், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் அலெக்ஸ், ஜார்ஜ்வில்சன், வாகைதுரை, களக்காடு, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், வில்சன், துரைராஜ், ராஜன், துரை, ஜெயசீலன், ராஜன், பாக்கியராஜ், பெருமாள், பாஸ்கர், விபின், கண்ணன், அருள், அப்துல், முருகன், உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த காமிராக்கள் மூங்கிலடி, பச்சையாறு அணைக்கு செல்லும் பாதை, மங்கம்மாள் சாலையில் பொருத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு அவற்றை இழந்த 254 நபர்களுக்கு அவை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2,703 சி.சி.டி.வி. காமிராக்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இன்று நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மீட்பு அதிகம்
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு அவற்றை இழந்த 254 நபர்களுக்கு அவை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடை பெற்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து 70 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகமான மீட்பு சதவீதமாகும்.
தென் மாவட்டங்களில் நெல்லை மாவட்டத்தில்தான் சாலை விபத்துக்கள் குறைவாக நடந்துள்ளது. 2022 -ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை பிணையை மீறியவர்கள் 48 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
சி.சி.டி.வி. காமிராக்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2,703 சி.சி.டி.வி. காமிராக்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொலை, போக்சோ வழக்குகள், வன்கொடுமை வழக்குகள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்ட 355 நபர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.2.81 கோடி வழங்கப்பட்டுள்ளது.
குட்கா பறிமுதல்
2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிர ரோந்து பணியின் அடிப்படையில் 182 கிலோ கஞ்சா, 30 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாதி ரீதியிலான மோதல்களை தூண்டிய தாக 80 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் இந்த ஆண்டு 32 சதவீதம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 42 சதவீதம் குறைந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மாவட்ட போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் 16 கொலைகள் இந்த ஆண்டு தடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் புகாரில் ரூ. 13.50 லட்சம் மீட்கப்பட்டு 23 பேருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் இந்த ஆண்டு ரூ.10 கோடி மதிப்பிலான 31 ஏக்கர் இடங்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
இந்த ஆண்டு போக்சோ வழக்கில் 8 பேருக்கும், கொலை வழக்கில் 2 பேருக்கும் நீதிமன்ற தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட் டத்தை ஒட்டி சுமார் 700 போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், சைபர் கிரைம் டி.எஸ்.பி.ராஜூ மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- தற்போதைய மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தினமும் அதிகாலையிலேயே வார்டுகளுக்கு சென்று தூய்மை பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
- தினமும் காலை 11 மணிக்கு முன்பாக சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்பட்டு விடுகிறது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக அறிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தினமும் அதிகாலையிலேயே வார்டுகளுக்கு சென்று தூய்மை பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தினமும் காலை 11 மணிக்கு முன்பாக சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்பட்டு விடுகிறது.
சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வீட்டின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான காலி இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும், வேலி அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையே வழக்கமாக குப்பை கொட்டும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் உடனடியாக பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரத்தை சீர் கெடுக்கும் வகையில் குப்பைகள் கொண்டு வருவதை ஏற்கனவே அடையாளம் கண்டு இருக்கிறோம். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் பழுதடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகள் மற்றும் அது தொடர்பான வேலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டி இருக்கிறது. மழைக்காலத்திற்கு பின்னர் கண்டிப்பாக கேமராக்கள் விரைந்து பொருத்தப்படும் என்றார்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், குறிப்பிட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தினாலும் வேறு இடத்தை குப்பை கொட்டுபவர்கள் கண்டுபிடித்து அங்கு குப்பையை கொட்ட தொடங்கி விடுவார்கள். இரவு நேரங்களில் ரோந்து சென்று குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சென்னை:
கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்ற பிறகு சென்னை நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை துரிதப்படுத்தினார்.
அதன் பேரில் சென்னை மாநகரம் 100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பாதுகாப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். பல இடங்களில் பொதுமக்களே முன் வந்து தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகிறார்கள். போலீசாரும் அவர்களின் கேமரா பொருத்தும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கேமரா பொருத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள்.
முக்கிய சாலைகளில் குறைந்தபட்சம் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேமரா பொருத்துவது தொடர்பாக அனைத்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்தை சீர் செய்யும் இடங்களை சுற்றியுள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் பயனாக சென்னை மாநகரில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்பவர்களும் சிக்குகிறார்கள். போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகனங்களின் எண்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து அவர்களின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த கேமராக்கள் மூலம் குற்றவாளிகளும் சிக்குகிறார்கள். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் சிக்னல் அருகே சில தினங்களுக்கு முன்பு ஒரு கொலை நடந்தது. அந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்காக ஆய்வு செய்த போது வடமாநில வாலிபரை சிலர் தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல பல்வேறு குற்ற செயல்களில் துப்பு துலக்குவதற்கு கேமராக்கள் உதவியாக உள்ளன.
குற்றவாளிகளுக்கு வைக்கும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தவறு செய்யும் போலீசாரும் சில நேரங்களில் சிக்குகிறார்கள். சமீபத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் மது அருந்தி பணிக்கு வந்திருப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு கூறி இருந்தார். அது பொய்யான குற்றச்சாட்டு என்பது கண்காணிப்பு கேமரா மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த போலீஸ்காரர் ஒரு பைக்கில் செல்லும் போது இன்ஸ்பெக்டர் அவரை தள்ளி விட்ட காட்சி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை நகரம் முழுவதும் இதுவரை 2 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன் சாவடி சந்திப்பில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை உள்ள இடங்களில் 12.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நேற்று 443 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. #CCTVCameras
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்