என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96812"
- பீரோ உடைக்கப்பட்டு 1 ஜோடி தோடு, செயின் உள்பட ஒன்றரை பவுன் தங்க நகைகள் கொள்ளை.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சிவாஜி நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகதீஷ் (வயது 30 ). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கும்பகோணம் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 1 ஜோடி தோடு, செயின் உள்பட ஒன்றரை பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் சம்பவத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:
சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் கணேசன். டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான சிதம்பரத்துக்கு சென்றார். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கணேசன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை சுருட்டி சென்றனர்.
இதுகுறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் காட்டுர் சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் சலாவுதீன் (25).இவர் இரவு கடையை மூடி விட்டு சென்றார். மறுநாள் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ. 11 ஆயிரத்து 600 ரூபாய் திருடு போயிருப்பது தெரிந்தது.
கோவை:
அன்னூர் அருகே உள்ள சானாம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன் (50). பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 20-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த நாகராஜன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து நாகராஜன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூரில் ஏரிக்கரை கூத்தபெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறும். இக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைப் பணத்தை திருவிழாவின்போது திறந்து எடுப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி சென்றுவிட்டார். நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த ரூபாய் ஒருலட்சத்தை டவுசர் பொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடக்கூரில் கடந்த சில நாட்களாக டவுசர் கொள்ளையர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இவர் திருப்பூரில் ரெடிமேடு ஆடைகள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வனிதா இரவு வீட்டில் படுத்திருந்தபோது மர்மநபர் ஜன்னல் வழியாக அவர் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்து சென்றுவிட்டார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசி மற்றொரு வீட்டிலும், நர்சிடமும் டவுசர் கொள்ளையர்கள் நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் தொடர் திருட்டு நடந்து வருவதால் கொள்ளையர்களை போலீசார் கைது செய்து நகைகளை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி:
தேனி அருகே சின்னமனூர் - சீப்பாலக்கோட்டை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சின்னமனூர், ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த அழகுமலை (வயது 44) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றுள்ளனர்.
நள்ளிரவு சமயத்தில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆனால் எந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல வில்லை.
மறுநாள் காலை கடைக்கு வந்த அழகுமலை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் பங்காரு லே-அவுட்டை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் கடந்த 1-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சீரடி சாய்பாபா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்றார்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த பிரபு வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம், செயின், மோதிரம், வளையல் உள்பட 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பிரபு சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
போரூர்:
மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயின்ட் அந்தோணி தேவாலயம் உள்ளது. இங்கு பாதிரியாராக ஏசுராஜ் உள்ளார். நேற்று இரவு பிரார்த்தனை முடிந்ததும் தேவாலயத்தின் கதவுகளை மூடிவிட்டு பாதிரியார் ஏசுராஜ், அருகே உள்ள தனது அறைக்கு சென்றார்.
இந்தநிலையில் அதிகாலை 2 மணி அளவில் தேவாலயத்தின் உள்ளே இருந்து சத்தம் கேட்டு ஏசுராஜ் சென்றார். அப்போது அங்கிருந்த மர்ம வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார். தேவாலய கதவு பூட்டை உடைத்து புகுந்த கொள்ளையன் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மடம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.
இந்தக் கடை மேற்பார்வையாளராக கோழிப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) விற்பனையாளர்களாக மேலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(40) கடம்பை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (36) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு மது விற்பனை செய்த தொகை ரூ.79ஆயிரத்து220 பணத்தை பழனி தனது மொபட்டில் வைத்துக்கொண்டு மூவரும் தனித்தனியே பைக்கில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். வந்தவாசி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை இணைப்பு பகுதியான காந்தி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது.
அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தடியுடன் 3 பேரையும் வழிமடக்கினர்.
மேலும் 4 பேர் பின்னால் வந்து பணம் எங்கே என்று கேட்டு உருட்டுக்கட்டை கத்தியைக் காட்டி மிரட்டினார்கள்.
பணம் இல்லை என்று மூவரும் கூறியதால் 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கி கத்தியால் வெட்டி பழனி மொபெட்டில் வைத்து இருந்த ரூ.79 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. தங்கராமன், வட வணக்கம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு மேலும் காயமடைந்த 3 பேரையும்சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனி ஏழுமலை, சிவக்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக வட வணக்கம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்