search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிம்புக்கு ஜோடியாகும் திரிஷா
    X

    சிம்புக்கு ஜோடியாகும் திரிஷா

    • இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது.
    • நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு- திரிஷா இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ' துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் 'கால்ஷீட்' பிரச்சினை காரணமாக விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.




    இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு

    விரைவில் தொடங்க உள்ளது. 'சைபீரியாவில் 'க்ளைமாக்ஸ்' காட்சியும் மற்றும் புதுடெல்லி, சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.




    இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. அலை, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிம்புக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு- திரிஷா இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    Next Story
    ×