search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - சீனா இடையே நிலவும் சூழ்நிலை கவலையை ஏற்படுத்துகிறது: அமெரிக்கா கருத்து
    X

    இந்தியா - சீனா இடையே நிலவும் சூழ்நிலை கவலையை ஏற்படுத்துகிறது: அமெரிக்கா கருத்து

    இந்தியா - சீனா இடையே தற்போது நிலவக்கூடிய பதற்றமான சூழ்நிலை கவலையை ஏற்படுத்துவதாக அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    இந்தியா - சீனா இடையே தற்போது நிலவக்கூடிய பதற்றமான சூழ்நிலை கவலையை ஏற்படுத்துவதாக அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

    சிக்கிம் எல்லை அருகே இந்தியா - சீனா - பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன.

    இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியா ராணுவத்தை திரும்ப பெற முடியாது, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறிவிட்டது. இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கூறிவரும் சீனா எல்லையில் அடிக்கடி போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், இந்தியா - சீனா இடையே தற்போது நிலவக்கூடிய பதற்றமான சூழ்நிலை கவலையை ஏற்படுத்துவதாக அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் ஹீத்தர் நாவேர்த் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹீத்தர் நாவேர்த், “இந்தியா - சீனா இடையே நிலவும் சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது எனக்கு தெரியும். இருதரப்பு மீதும் நாங்கள் நம்பிக்கையை வைத்து உள்ளோம், அமைதிக்காக இருதரப்பும் சிறந்த ஒப்பந்தத்திற்கு வரவேண்டும், அதற்கு இருதரப்பும் பணியாற்ற வேண்டும்,” என கூறியுள்ளார்.

    எல்லையில் பதற்றத்தை தணிக்க நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா மற்றும் சீனாவை நாங்கள் ஊக்குவிக்கிறோம் எனவும் ஹீத்தர் நாவேர்த் குறிப்பிட்டுள்ளார். 
    Next Story
    ×