search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்கிம் விவகாரத்தில் மக்களை இந்தியா திசை திருப்புகிறது: சீனா குற்றச்சாட்டு
    X

    சிக்கிம் விவகாரத்தில் மக்களை இந்தியா திசை திருப்புகிறது: சீனா குற்றச்சாட்டு

    சிக்கிம் விவகாரம் தொடர்பாக மக்களை இந்தியா திசை திருப்புவதாக சீன அரசு இன்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
    பீஜிங்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்கள் சீன நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன. இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் சில தினங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது.

    ஆனால், எல்லை தாண்டி ஊடுருவியதாக கூறிய இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்தோடு, இந்திய வீரர்கள்தான் எல்லை தாண்டி வந்ததாக கூறியது. டாங்லாங் பகுதியில் சீன ராணுவம் சாலைப்பணிகளை மேற்கொள்வதாகவும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இப்படி ஒரு புதிய சாலை அமைக்கப்பட்டால் வடகிழக்கு மாநிலங்களை இந்தியா அணுக முடியாதவாறு சீனப் படைகள் தடுப்பதற்கான அச்சாரமாக இந்த சாலை பணிகளை இந்தியா பார்க்கிறது.


    இந்த விவகாரம் இரு நாடுகளின் இடையிலான எல்லைப்பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் இங்கு இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிக்கிம் விவகாரம் தொடர்பாக மக்களை இந்தியா திசை திருப்புவதாக சீன அரசு இன்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, சீன தலைநகர் பீஜிங்கில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் க்ர்ன் ஷுவாங் கூறியதாவது:-

    1890-ம் ஆண்டு பிரிட்டன் - சீனா இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, டோக்லாம் பகுதி சீனா, இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையிலான முச்சந்தி பகுதியாக உள்ளது என கூறுவதன் வாயிலாக மக்களை இந்தியா திசை திருப்புகிறது. 1890-ம் ஆண்டு உடன்படிக்கையின்படி, எல்லைப்பகுதியில் சிக்கிம் எல்லை கிழக்கு மலையின் ஓரத்தில்தான் அமைந்துள்ளது. இந்நிலையில், கிப்மோச்சி மலையில் இருந்து சுமார் 2 ஆயிரம் மீட்டர் தூரத்தில் தான் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    சாலை அமைக்கும் பணிளுக்கும் இந்தியா-பூட்டான்-சீனா இடையிலான முச்சந்தி எல்லைப் பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், முச்சந்தி எல்லையில் சீனா சாலை அமைத்து வருவதாக கூறி இந்திய தரப்பினர் மக்களை திசை திருப்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×