search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் கவர்னர் இன்று ஆய்வு
    X

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் கவர்னர் இன்று ஆய்வு

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று பகலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். சேலம் மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று பகலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தை சுற்றி பார்த்தார். பயணிகளிடம் கை குலுக்கினார். பஸ் நிலையத்தையும், சேலம் மாநகரையும் தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    மேலும் சேலம் மாநகரை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். அந்த துண்டு பிரசுரங்களில் உள்ள வாசகங்களை படித்துக்காட்டும்படி பொதுமக்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார். அவர்களும் அதை படித்து காட்டினார்கள். அதை கவர்னர் ஆர்வமாக கேட்டார். 

    பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள மாதிரி கழிப்பறையை பார்வையிட்டார். அதன் பிறகு குப்பை அள்ள பயன்படுத்தப்படும் நவீன எந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தையும், குப்பை அள்ள பயன்படுத்தப்படும் பொருட்களையும் பார்வையிட்டார். 

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிய சாப்ட்வேர் ஒன்றையும் கவர்னர் வெளியிட்டார். கவர்னர் வருகைகையொட்டி புதிய பஸ் நிலையம் இன்று பளிச்சென்று காணப்பட்டது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போலீசாரும் பாதுகாப்புக்காக அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். 

    வழக்கமாக ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் ரோந்து ஜீப் வழங்கப்பட்டு இருக்கும். இன்று புதிய பஸ் நிலையத்தில் புதிதாக ரோந்து வேன் ஒன்றும் நிறுத்தப்பட்டு அதில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×