search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறக்குமதி செய்த மணலை விற்க தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    இறக்குமதி செய்த மணலை விற்க தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

    இறக்குமதி செய்த மணலுக்கு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை வசூலித்தபிறகு விற்பனை செய்ய அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி விடுத்த மதுரை ஐகோர்ட்டு, மணலை விற்க தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை சேர்ந்த ராமையா, மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு மணல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 6 லாரி மணலை மார்த்தாண்டத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு கொண்டு சென்றபோது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மணலை சாலை மார்க்கமாக கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

    அதற்கு அரசு தரப்பு வக்கீல், ‘மணலை சுமார் 3,500 லாரிகள் மூலமாக தான் கொண்டு செல்ல முடியும். அதை ஒரே நாளில் கொண்டு செல்ல அனுமதிப்பதும், கண்காணிப்பதும் இயலாத காரியம்’ என்று மறுப்பு தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “முறையான அனுமதியுடன் மணல் இறக்குமதி செய்து, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை முறையாக வசூலித்தநிலையில், அனுமதி மறுப்பது ஏன்?” என்று கேள்வி விடுத்தார்.

    இதை ஏற்க இயலாது என்று கூறிய நீதிபதி, “தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய லைசென்சு பெறவில்லை என்பதால் அனுமதி மறுக்கிறீர்கள். ஆனால் அந்த உரிமங்களை பெறுவதற்கான வழிகாட்டல் எதுவும் கூறப்படவில்லை. தடை செய்யப்படாத பொருளை விற்பனை செய்ய ஒரு மாநிலம் வழியாக மற்றொரு மாநிலத்துக்கு கொண்டு செல்வதை மத்திய அரசே அனுமதிக்கிறது. இதற்கு தடை விதிக்க முடியாது. எனவே மணலை விற்பனை செய்ய மனுதாரருக்கு தற்காலிக லைசென்சு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்” என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 
    Next Story
    ×