search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவன்-சிறுமி பலி
    X

    சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவன்-சிறுமி பலி

    சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் மற்றும் சிறுமி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி உள்பட பல பகுதிகளில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் காய்ச்சல் பாதிப்பால் தினமும் உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பால் இது வரை 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமார். இவரது மகள் புவனா (6). அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த புவனா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார்.

    பின்னர் தம்மம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட புவனாவை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட புவனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி புவனா பரிதாபமாக இறந்தார்.

    இதே போல சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளூரில் இருந்து ஏத்தாப்பூர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் சிவாஜி. இவர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கணேஷ் (6)அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட கணேசை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.

    பின்னர் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கணேஷ் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    Next Story
    ×