search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: 5 திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு - தா.மோ.அன்பரசன்
    X

    விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: 5 திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு - தா.மோ.அன்பரசன்

    திருக்கழுக்குன்றத்தில் 16-ந் தேதி விவசாயிகள் சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் 5 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    திருக்கழுக்குன்றத்தில் 16-ந் தேதி விவசாயிகள் சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் 5 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    இது குறித்து காஞ்சீபுரம் வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இயற்கை நீர் வளப்பாதுகாப்பு இயக்கம் மூலம் 19-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும், அனைத்து கட்சி தலைவர்களும் இணைந்து வருகிற 16-ந் தேதி (புதன்) தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் விவசாயிகள் உரிமைப் போராட்டம் நடத்துகின்றனர்.

    இந்த போராட்டத்தை தி.மு.க.வினர் முன்னின்று நடத்திட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

    இதை ஏற்று காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகில் மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் ஞானப்பிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.

    இதில் ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, மாவட்ட துணைச் செயலாளர் விசுவநாதன், வட்டார காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், பேரூர் காங்கிரஸ் தலைவர் கமலஹாசன், விவசாய அணி செயலாளர் சீனிவாசன், கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் அழகேசன், குமார், ஜெகதீசன் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமணி சதீஷ், செல்வகுமார், செந்தில் முஸ்லிம் லீக் நியாமதுல்லா, பைசன், செங்கை யூனுஸ், தி.க.ராஜேந்திரன், உள்பட பலர் பேசுகிறார்கள்.

    இதில் தி.மு.க. தலைமை தீர்மான குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணா நிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சுந்தரமூர்த்தி, ரூபி மனோகரன், கம்யூனிஸ்டு கட்சி சங்கர், மேகநாதன், விடுதலை சிறுத்தை செழியன், ராஜ்குமார், தமிழரசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பேரூர் தி.மு.க. செயலாளர் யுவராஜ் நன்றி கூறுகிறார்.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.

    Next Story
    ×