search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்ணாவிரத போராட்டத்தை தொ.மு.ச.தலைவர் வீரராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியபோது எடுத்தபடம்.
    X
    உண்ணாவிரத போராட்டத்தை தொ.மு.ச.தலைவர் வீரராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியபோது எடுத்தபடம்.

    என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

    பணி நாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த 1000-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு என்.எல்.சி. நிறுவனம் மாதத்தில் 29 நாட்கள் பணி வழங்கி வந்தது.

    இந்தநிலையில் திடீரென்று பணிநாட்களை 19 நாட்களாக குறைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்களது போராட்டம் குறித்து புதுச்சேரியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் அவசர கூட்டம் நடத்தினர்.

    இதில் அடுத்தக்கட்டமாக 21-ந்தேதி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நெய்வேலி தெர்மல் பஸ்நிலையம் கியூ.பாலம் அருகே ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இன்று குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டதுக்கு சி.ஐ.டி.யூ.சங்க நிர்வாகி சக்கரபாணி தலைமை தாங்கினார். போராட்டத்தை தொ.மு.ச. தலைவர் வீர.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார். இதில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி பாரதிய மஸ்தூர் சங்கம், ஐ.என்.டி.யூ.சி., தமிழக வாழ்வுரிமை கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 1000 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர். போராட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகள் முடிவு செய்கிறார்கள்.

    இந்தநிலையில் என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி.மனிதவள துறைப்பொதுமேலாளர் குருநாதனிடம் நேற்று வேலை நிறுத்த நோட்டீசை வழங்கினர்.
    Next Story
    ×