search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்று 20 ஓவர் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் செல்கிறது
    X

    மூன்று 20 ஓவர் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் செல்கிறது

    மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தான் செல்ல இருக்கிறது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்து உள்ளன. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம்சேத்தி உறுதிப்படுத்தினார்.

    அவர் கூறுகையில், இரு கிரிக்கெட் வாரியங்களும் அடுத்த 5 ஆண்டுக்கு 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்து உள்ளன. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் நடக்கும் தேதி மற்றும் இடங்கள் பிறகு முடிவு செய்யப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. முதல் போட்டி மார்ச் 29-ந்தேதியும், 2-வது போட்டி, 31-ந்தேதியும், 3-வது பேர்டி ஏப்ரல் 1-ந்தேதியும் நடக்கிறது என்றார்.
    Next Story
    ×