search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைப்பு
    X

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைப்பு

    பாதுகாப்பு அச்சம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் பாகிஸ்தானுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. மூன்று ஆட்டங்களையும் லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டியது. இந்த நிலையில் பாதுகாப்பு அச்சம் காரணமாக பெரும்பாலான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல தயங்குகிறார்கள்.

    குறிப்பாக திட்டமிட்டபடி தொடர் நடந்தால் அங்கு செல்ல இயலாது என்று கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, பொல்லார்ட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டனர். இதையடுத்து இந்த தொடர் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இரு அணிகளுக்கும் ஏதுவான ஒரு மாதத்தில் இந்த போட்டியை நடத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×