search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியா?: மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விளக்கம்
    X

    புரோ கபடி போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியா?: மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விளக்கம்

    புரோ கபடி போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    5-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 25-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் புனேயில் மோதுகின்றன. முதல் 4 சீசனில் 8 அணிகள் பங்கேற்றன. இந்த முறை மேலும் 4 அணிகள் தமிழ்நாடு, அரியானா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து களம் இறங்க உள்ளன.

    இதையடுத்து அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. புரோ கபடி போட்டிக்கான ஏலப்பட்டியலில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றதால் அவர்கள் இந்த போட்டியிலும் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகின.

    இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘புரோ கபடி போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை அழைக்கலாம். ஆனால் அவர்களால் இங்கு விளையாட முடியாது. ஒரு வேளை அவர்கள் ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்பட்டாலும் கூட அவர்களை விளையாட அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும்.



    பயங்கரவாத ஊக்குவிப்பை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் எந்த வித விளையாட்டு உறவுக்கும் வாய்ப்பே இல்லை’ என்றார். ஏற்கனவே ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கால்பதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது நினைவிருக்கலாம்.

    இதற்கிடையே புரோ கபடிக்கான வீரர்களின் ஏலம் நேற்று நடந்தது. இதில் அதிகபட்சமாக ஆல்-ரவுண்டர் மன்ஜீத் சிலார் ரூ.75½ லட்சத்துக்கு ஜெய்ப்பூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரது அடிப் படை விலை ரூ.20 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுர்ஜீத் சிங் ரூ.73 லட்சத்திற்கும் (பெங்கால் வாரியர்ஸ்) ராஜேஷ் நார்வல் ரூ.69 லட்சத்திற்கும் (உத்தரபிரதேச அணி), சந்தீப் நார்வல் ரூ.66 லட்சத்திற்கும் (புனேரி பால்டன்), குல்தீப்சிங் ரூ.51½ லட்சத்திற்கும் (மும்பை) ஏலம் போனார்கள்.
    Next Story
    ×