search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தூதருடன் எங்கள் தலைவர்கள் சந்திப்பா? - மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு
    X

    பாகிஸ்தான் தூதருடன் எங்கள் தலைவர்கள் சந்திப்பா? - மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு

    பாகிஸ்தான் தூதருடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்ததாக பிரதமர் மோடி கூறியதை காங்கிரஸ் கட்சி மறுத்ததுடன், இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத்தில் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தன்னை இழிபிறவி என்று கூறிய மணிசங்கர் அய்யரை கடுமையாக விமர்சித்தார். 

    ‘மணி சங்கர் அய்யர் வீட்டில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் பாகிஸ்தான் உயர் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டதாகவும், இந்த சந்திப்புக்கு பின்னர் மறுநாள் மணி சங்கர் அய்யர் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.

    இது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் உடனடியாக மறுத்துள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்து வரும் மோடி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மோடி கவலையாகவும், சோர்வாகவும் கோபத்துடனும் உள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை, பொய்களை அடிப்படையாக கொண்டது. இதுபோன்ற செயல் பிரதமரின் தகுதிக்கு ஏற்றதல்ல. 

    பாகிஸ்தானை நேசிப்பது யார்? பிரிவினைவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? என்பதை நாடே அறியும். பாகிஸ்தான் தொடர்பான பிரச்சினைகளை மையப்படுத்தி தேர்தலில் போட்டியிட மோடி திட்டமிட்டால், அவர் ஏன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பை நம்பினார்? ஏன் அவர்களை பதான்கோட் விமானப்படை தளத்திற்கு வந்து விசாரிக்க அனுமதி அளித்தார்? என்பதையும் குஜராத் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

    தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் மனைவி பாகிஸ்தானில் இருந்து மும்பை வந்தபோது அவரை கைது செய்ய மோடி அரசு தவறிவிட்டதாகவும் சுர்ஜிவாலா குற்றம் சாட்டினார்.
    Next Story
    ×